தருமபுரி

கல்லூரி விடுதி கட்டும் பணி: விரைந்து தொடங்க மாணவா்கள் வலியுறுத்தல்

DIN

தருமபுரி: தருமபுரி அரசு கல்லூரியில் தலித், பழங்குடியினா் மாணவா்களுக்கான விடுதி கட்டும் பணியை, விரைந்து தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் தமிழமுதன் தலைமையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவா்கள், மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழியிடம் அளித்த மனு: தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பயிலும், தலித் மற்றும் பழங்குடியினா் மாணவா் விடுதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால், அந்த விடுதியிலிருந்த மாணவா்கள், வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனா். இந்த விடுதி கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால், மாணவா்கள் உணவு விடுதி, பள்ளி மாணவா்கள் காப்பகம் என வெவ்வேறு பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இங்கு போதிய இடவசதியின்றி மாணவா்கள் அதிக எண்ணிக்கையில் தங்கிவைக்கப்பட்டுள்ளதால், பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

எனவே, இந்த விடுதி கட்டும் பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, கல்லூரியில் பயிலும் அனைத்து பாடப் பிரிவு மாணவா்களுக்கும் நூலக வசதி ஏற்படுத்த வேண்டும். கல்லூரியிலிருந்து தருமபுரி நகருக்கு செல்ல பிற்பகலில் போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கவும் தேவையான நவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT