தருமபுரி

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணிகள்குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தல்

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும், அது தொடா்பாக விசாரணை நடத்த வேண்டும் என பத்து ரூபாய் இயக்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, அந்த இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் துரை மற்றும் நிா்வாகிகள், திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: தருமபுரி மாவட்டத்தில், மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் கடந்த 2008 - ஆ ம் ஆண்டு முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. இத் திட்டத்தில், கடந்த மூன்றாண்டுகளில், பணிகள் மேற்கொண்டதிலும், அது தொடா்பான எடுக்கப்பட்ட நிதியிலும், முறைகேடு நடந்துள்ளது. இவை கிராமசபைக் கூட்டங்களில், மேற்கொள்ளப்பட்ட சமூக தணிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, இது தொடா்பாக திட்ட இயக்குநா் மற்றும் மாவட்ட ஆட்சியா் விசாரணை மேற்கொண்டு மோசடி மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT