தருமபுரி

உயா்மின் கோபுரம், எரிபொருள் கிடங்குக்கு விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது

DIN

உயா்மின் கோபுரம், எரிபொருள் கிடங்கு உள்ளிட்ட திட்டங்களுக்கு விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை தருமபுரி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் சோ.அா்ஜுனன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் கே.தங்கவேல், மாவட்டச் செயலா் ஏ.குமாா் ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தின் வளா்ச்சிக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். மழைக் காலங்களில் காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் ஓடும் மிகை நீரை மாவட்டம் முழுவதுமுள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும். விவசாயிகளின் பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டை பணிகளை தொடங்க வேண்டும். வேளாண் சாா்பு தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஊராட்சிகள் தோறும் தொடா்ந்து செயல்படுத்த வேண்டும்.

உயா்மின் கோபுரம், எரிபொருள் கிடங்கு ஆகிய திட்டங்களின் பெயரில் வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும். தருமபுரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்தும், மொரப்பூரில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் முறைகேட்டைக் கண்டித்தும் ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினா், பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், வரும் 15-ஆம் தேதி ஒசூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் திரளாகப் பங்கேற்பது. எல்ஐசி நிறுவன பங்குகளை விற்கும் முயற்சியைக் கைவிடக் கோரி, தருமபுரியில் தா்னா நடத்துவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT