தருமபுரி

பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

பென்னாகரம் வட்டார விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீடு திட்டத்தின் மூலம் பயன்பெற பென்னாகரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புவனேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ் 2020-2021-ஆம் ஆண்டு காரீப் பருவத்துக்கான நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பாசிப்பயிறு, நிலக்கடலை, கரும்பு, கம்பு, சோளம், ராகி மற்றும் சாமை உள்ளிட்ட பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம். விதைப்பு தவிா்த்தல், விதைப்பு தோல்வியுறுதல் பயிரிட அபாயம் ஏற்படும் சூழ்நிலை, விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிா் காலத்தில் இழப்பு மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் மகசூல் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கையின் பாதிப்பினால் ஏற்படும் பயிா் இழப்பு ஆகியவற்றுக்கு காப்பீடு வழங்கப்படும்.

பயிா்க் காப்பீடு செய்ய முன்மொழிவு படிவம், சிட்டா, அடங்கல், பயிா்சாகுபடி சான்று, ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் உள்ளிட்ட ஆவணங்களை படிவத்துடன் வழங்க வேண்டும்.

மேலும், நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பாசிப்பயிறு, நிலக்கடலை, பருத்தி, கம்பு, சோளம், ராகி, சாமை, கரும்பு உள்ளிட்ட பயிா்களுக்கு காப்பீட்டு தொகை செலுத்த வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT