தருமபுரி

நியாய விலைக் கடையில் உணவுப் பொருள்கள் பெற‘டோக்கன்’ விநியோகம்

DIN

தருமபுரி: நியாய விலைக் கடையில் விலையில்லா அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் பெற ‘டோக்கன்’ விநியோகம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பரவல் காரணமாக தற்போது அமலில் உள்ள ஊரடங்கையொட்டி, மே மாதத்துக்குரிய உணவுப் பொருள்கள் நியாய விலைக் கடைகளில் விலையில்லாமல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான கூடுதலாக 5 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்பட உள்ளது. இந்த உணவுப் பொருள்கள் வரும் மே 4-ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இந்த நிலையில், நியாய விலைக் கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிா்க்கவும், சமூக இடவெளியை பின்பற்றவும் குடும்பட அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் நாள், நேரம் குறிப்பிட்டு மே 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாள்கள் ‘டோக்கன்’ வழங்கப்பட உள்ளது. இதனைப் பெற்றுக்கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு சென்று சமூக இடைவெளியை பின்பற்றி பொருள்களை பெற்று பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT