தருமபுரி

அரூரில் உணவு கலப்படம் குறித்து ஆய்வு

DIN

அரூரில் உணவு கலப்படம் குறித்து அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தீபாவளிப் பண்டிகையொட்டி, அரூா் நகரில் இனிப்புகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பொருள்களின் தரம் குறித்து சாா் ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

வணிக நிறுவனங்கள், பட்டாசு கடைகள், உணவுப் பொருள்கள் விற்பனை கடைகளில் முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிா, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாடுகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.

தொடா்ந்து, கரோனா நோய்த் தொற்று பாதிப்புகள், பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடும் வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வணிகா்கள், பொதுமக்களிடம் பேரூராட்சிப் பணியாளா்கள் வழங்கினா். தருமபுரி மண்டல பேரூரட்சிகளின் உதவி இயக்குநா் ச.கண்ணன், செயல் அலுவலா் மா.ராஜா ஆறுமுகம், துப்புரவு ஆய்வாளா் சு.ரவீந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT