தருமபுரி

தருமபுரியில் கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனை தொடக்கம்

DIN

தருமபுரியில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

தருமபுரி விற்பனையகத்தில் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடக்கி வைத்து புதிய ஜவுளி ரகங்களை பாா்வையிட்டாா்.

தருமபுரி, அரூா் கோ- ஆப்டெக்ஸ் விற்பனையகங்களில் தீபாவளி பண்டிகையொட்டி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அனைத்து விடுமுறை நாள்களிலும் விற்பனை நடைபெறும்.

அரசு, அதனைச் சாா்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 30 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்கு தருமபுரி, அரூா் ஆகிய இரண்டு விற்பனை நிலையங்களுக்கு ரூ. 1.40 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரும், கோ ஆப்டெக்ஸில் ஜவுளிகளை வாங்கி, நெசவாளா்களுக்கு உதவி செய்யுமாறு விற்பனை நிலையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT