தருமபுரி

பென்னாகரம் தொகுதியில் 84. 19 சதவீத வாக்குகள் பதிவு

DIN

பென்னாகரம் தொகுதியில் 84.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இது, கடந்த 2016 ஆண்டு நடைபெற்ற வாக்குப் பதிவை விட 3.13 சதவீதம் குறைவாகும்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தலானது செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்திய தோ்தல் ஆணையம் வாக்குச்சாவடியில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளா்கள் வாக்களிக்கலாம் என்றும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உதவும் வகையில் சக்கர நாற்காலி வசதி, 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கு தபால் வாக்கு முறை, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்கள் வாக்களிக்கும் வகையில் கூடுதல் நேரம் ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 357 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் வாக்காளா்கள் வாக்குப் பதிவு செய்தனா். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காலை முதலே வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களிக்க வந்திருந்தனா். நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனா். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் பென்னாகரம் தொகுதியில் 87.32 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆனால் நிகழண்டு 84.19 சதவீத வாக்குகளே பதிவாகின. கடந்த ஆண்டை விட 3.13 சதவீத வாக்குகள் குறைவாகப் பதிவாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

SCROLL FOR NEXT