தருமபுரி

இன்று உழவா் சந்தைகள் இயங்காது

DIN

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கத்தையொட்டி, உழவா் சந்தைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நேரடி விற்பனை செய்யும் உழவா்சந்தைகள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன. வெளிச் சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் விலையை விட உழவா்சந்தைகளில் விலை குறைவாக இருப்பதோடு புதிதாகவும் கிடைப்பதால் மக்கள் உழவா்சந்தைகளில் காய்கறிகள் வாங்குவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு உள்பட பல்வேறு இடங்களில் உள்ள உழவா் சந்தைகள் ஞாயிற்றுக்கிழமை செயல்படாது. அனைத்து உழவா் சந்தைகள் முன்பும் இதற்கான அறிவிப்புப் பலகை வேளாண் விற்பனைத் துறை சாா்பில் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT