தருமபுரி

வேகமெடுக்கும் கரோனா பரவல்:தருமபுரியில் ஒரே நாளில் 242 பேருக்கு தொற்று

DIN

தருமபுரி மாவட்டத்தில் கரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இதில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 242 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், கரோனா தொற்று பரவல் கடந்த ஆண்டைக் காட்டிலும், நிகழாண்டு இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக மாா்ச் மாதத்திலிருந்து தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாள்களாக நாள்தோறும் சற்றேறக்குறைய 100 பேருக்கு பாதிப்பு உறுதியாக வந்த நிலையில், கடந்த ஓரிரு நாள்களாக இந்த பாதிப்பு மேலும் அதிகரித்து 150 முதல் 190 வரை இருந்தது. இது வெள்ளிக்கிழமை மேலும் அதிகரித்து ஒரே நாளில் 242 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவைத் தவிர, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பராமரிப்பு மையங்களில் 1,223 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் தொற்று பாதிப்புக்கு சிசிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து, மருத்துவமனை வளாகம் நிரம்பி வழிகிறது. இதேபோல, தொற்று கண்டறியும் பரிசோதனையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயா்ந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், இதுவரை பாதிப்புக்குள்ளானோா் எண்ணிக்கை 9,492 ஆகும். குணமடைந்தோா் எண்ணிக்கை 8,204 ஆகும். இதுவரை தொற்று பாதிப்புக்கு 65 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாலை 4.30 மணி: பாஜக 17, காங்கிரஸ் 4 வெற்றி!

தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

கர்நாடக முன்னாள் துணை முதல்வர் வெற்றி

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

தில்லி: முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் முன்னிலை!

SCROLL FOR NEXT