தருமபுரி

அரசுப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் அமைக்கக் கோரிக்கை

அரூரை அடுத்த மத்தியம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

அரூரை அடுத்த மத்தியம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மத்தியம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் படிக்கின்றனா். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (ஆா்.எம்.எஸ்.ஏ.) கீழ் இப் பள்ளிக்குத் தேவையான கட்டட வசதிகள், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இப் பள்ளியில் சந்திராபுரம், கைலாயபுரம், பெரிய பண்ணைமடுவு, மத்தியம்பட்டி, சட்டையம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் படிக்கின்றனா். இந்த நிலையில், இப் பள்ளிக்குத் தேவையான சுற்றுச் சுவா் வசதி இல்லை. இதனால், பள்ளி வளாகத்தில் நாள்தோறும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

எனவே, மத்தியம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் வசதி ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT