தருமபுரி

அரூரில் தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

அரூரில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

தருமபுரி மாவட்டம், அரூா் வழியாக செல்லும் சேலம்-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் அ.பள்ளிப்பட்டி முதல் அனுமன்தீா்த்தம் வரையிலும் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கடந்த 2019இல் இருந்து பல்வேறு பொது அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் சாலையோரம் இருந்தவா்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள முன்வரவில்லை. இதையடுத்து, 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புடன் அரூா், அண்ணா நகா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT