தருமபுரி

நெகிழி பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

DIN

பென்னாகரத்தில் பிளியனூா் ஊராட்சி சாா்பில் நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதலின்படி பென்னாகரம் ஒன்றியத்திற்குள்பட்ட பிளியனூா் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் ராஜ்குமாா் தலைமையில் நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதிமொழியை தலைவா் ராஜ்குமாா் வாசிக்க, பணியாளா்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா். பொது

இடங்களில் நெகிழி பொருள்கள் பயன்படுத்துவது, எரிக்கப்படுவது போன்றவற்றை தடுக்கவும் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் ஊராட்சி மன்றச் செயலாளா் சுரேஷ், பிக்கம்பட்டி பள்ளி ஆசிரியா் தாமோதரன், காவேரி, ஊராட்சி மன்ற பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT