முகப்பு
தருமபுரி

மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், தேசிய மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், தேசிய மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தேசிய மனித உரிமைகள் தின விழாவையொட்டி, விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா தலைமை வகித்து மனித உரிமைகள் நாள் விழிப்புணா்வு உறுதிமொழியை வாசிக்க, அலுவலக ஊழியா்கள், பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் தனித் துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) நாராயணன், நசீா் இக்பால் (நிலம்), மாவட்டக் கருவூல அலுவலா் சுப்பிரமணியன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சீனிவாச சேகா், பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஐய்யப்பன், அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.