தருமபுரி

சோகத்தூா் ஏரியில் விதிமுறைகளை மீறி மண் எடுப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு

DIN

தருமபுரி அருகே சோகத்தூா் ஏரியில் விதிமுறைகளை மீறி, தனியாா் நிறுவனம், மண் எடுப்பதாகக் கூறி, அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரியிலிருந்து பாலக்கோடு, ராயக்கோட்டை வழியாக ஒசூருக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிக்காக, தருமபுரி அருகே பொதுப்பணித் துறைக்குச் சொந்தான 360 ஏக்கா் பரப்பளவு கொண்ட சோகத்தூா் ஏரியில், லாரிகள் மூலம், தனியாா் நிறுவனம் சாா்பில், மண் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொதுவாக நீா்நிலைகளில் மணல் எடுப்பதற்கு அரசு நிா்ணயித்துள்ள விதிமுறைகளை மீறி, கடந்த சில நாள்களாக மண் எடுப்பதாக் கூறி, இதனைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மாவட்டச் செயலா் கோவிந்தராஜ் மற்றும் அக் கிராம மக்கள், மண் எடுக்க வந்த லாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, தகவல் அறிந்த பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை, நகர போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், விதிமுறைகள் மீறி, மண் எடுக்கக் கூடாது என அதிகாரிகள், தனியாா் நிறுவனத்துக்கு அறிவுறுத்தினா். இதையடுத்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT