முகப்பு
தருமபுரி

பழங்குடியினருக்குப் பட்டா வழங்கக் கோரி மனு

அரூா் வட்டத்தில் உள்ள சிட்லிங் மலைக் கிராமத்தில் வசிக்கும் வீடற்ற பழங்குடியின மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி பாஜக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

அரூா் வட்டத்தில் உள்ள சிட்லிங் மலைக் கிராமத்தில் வசிக்கும் வீடற்ற பழங்குடியின மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி பாஜக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட பாஜக இளைஞரணிச் செயலாளா் கு.திவாகரன், பிரசார பிரிவு மாவட்டத் துணைத் தலைவா் ராஜதுரை ஆகியோா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சிட்லிங் மலைக் கிராமத்தில் சுமாா் 60-க்கும் மேற்பட்டோா் வீடின்றி தவித்து வருகின்றனா்.

இவா்களுக்கு அப்பகுதியில் தனியாா் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்டு, அதில் பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.