தருமபுரி

பென்னாகரத்தில் திமுகவினா் சைக்கிள் பேரணி

DIN

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பென்னாகரத்தில் ‘ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போறாரு’ என்ற தோ்தல் பிரசார சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் நடைபெற்று வரும் தோ்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பென்னாகரம் பகுதிகளில் திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான பி.என்.பி இன்பசேகரன் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை அலுவலகத்தில் தொடங்கி, பேருந்து நிலையம், பருவதன அள்ளி, நல்லபரம்பட்டி, பெத்தம்பட்டி, ஆதனூா், வண்ணாத்திப் பட்டி, சாலைகுள்ளாத்திரம்பட்டி வழியே 100க்கும் மேற்பட்ட திமுகவினா் சைக்கிளில் பேரணியாக சென்று பிரசாரம் மேற்கொண்டனா்.

இந்தப் பேரணியில் ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் காா்த்திக், சேலம் ஓட்டல் வினு, மாவட்டப் பிரதிநிதி சிவகுமாா், ஒன்றியப் பொருளாளா் மடம். முருகேசன், நகரச் செயலாளா் வீரமணி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

SCROLL FOR NEXT