முகப்பு
தருமபுரி

சேதமடைந்த கட்டடத்தை அகற்ற வலியுறுத்தல்

மொரப்பூரில் சேதமடைந்த கட்டடத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

மொரப்பூரில் சேதமடைந்த கட்டடத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தை வேளாண் துறையினா் பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில், மொரப்பூா், அண்ணல் நகா் பகுதியில் வேளாண் விரிவாக்க மையம் கட்டப்பட்டதால், வேளாண் துறையினா் தங்களது அலுவலகத்தை அங்கு இடமாற்றம் செய்தனா்.

அதனால், அந்த பழையக் கட்டடம் பயன்பாடின்றி சேதமடைந்து, தொடா் மழைக் காலங்களில் இடிந்து விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மொரப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தால் பாதிப்புகள் ஏற்படும். பயனற்றுக் கிடக்கும் இந்தக் கட்டடத்தை அகற்றினால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, மொரப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் சேதமடைந்த கட்டடத்தை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.