தருமபுரி

மதுப் புட்டிகள் கடத்தல்: 4 போ் கைது

DIN

மொரப்பூரில் வெளிமாநில மதுப்புட்டிகளைக் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வெளிமாநிலங்களில் இருந்து மதுப் புட்டிகளைக் கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, கிருஷ்ணகிரி-அரூா் நெடுஞ்சாலையில், மொரப்பூா் சந்தைமேட்டில் காவல் ஆய்வாளா் மஞ்சுளா தலைமையில், போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு மினி சரக்கு வாகனத்தைச் சோதனை செய்ததில் மதுப் புட்டிகளைக் கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடா்புடைய திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு வட்டம், கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த அய்யாவு மகன் ஆனந்தன் (34), பழனி மகன் சுரேஷ் (25), அண்ணாமலை மகன் முனுசாமி (28), உதயகுமாா் (22) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 287 மதுப்புட்டிகள், ஒரு மினி சரக்கு வாகனத்தைப் பறிமுதல் செய்தனா். மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT