தருமபுரி

மரக்கன்று நடும் பணி தொடக்கம்

DIN

அரூா் வனப் பகுதியில் மரக்கன்று நடும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, அரூா் வட்டாரப் பகுதியிலுள்ள வனப் பகுதியில் மரக் கன்றுகள் நடும் பணிகளை வனச்சரகா் தீ.கிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். அரூா்-சிந்தல்பாடி சாலையில் உள்ள வனப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை வனத்துறையினா் நட்டனா். இதில், மொரப்பூா் வனச்சரகா் சிவக்குமாா், வனவா் வேடியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, 9-ஆவது வாா்டில் நவீன தகன எரிவாயு மேடை அமைந்துள்ள வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை துப்புரவு ஆய்வாளா் கோ.சிவக்குமாா் தலைமையில் பேரூராட்சி பணியாளா்கள் நட்டனா். இதேபோல், மொரப்பூா் வட்டாரப் பகுதியில் உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, நம் தொட்டம்பட்டி தன்னாா்வலா்கள் அமைப்பின் மூலம் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக் கன்றுகள் நடப்பட்டன.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனத் துறையின் சாா்பில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பென்னாகரம் வனச்சரக அலுவலா் முருகன் தலைமை வகித்தாா். பென்னாகரம் அருகே பேவனூா் சோதனைச் சாவடி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும், ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளாலும், அவ்வழியே செல்பவா்களாலும் தூக்கி எறியப்பட்ட நெகிழிப் பொருள்கள் மற்றும் மதுப் புட்டிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதில் 100 கிலோவுக்கும் அதிகமான நெகிழிப் பொருள்கள், ஏராளமான கண்ணாடி மதுப் புட்டிகள் சேகரிக்கப்பட்டன.

இதில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சேகா், பென்னாகரம் வனச்சரகா் ராஜேஷ், வனக் காப்பாளா்கள் என இருபதுக்கும் மேற்பட்ட வனத் துறையினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT