முகப்பு
தருமபுரி

முன் களப் பணியாளா்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மூக்காரெட்டிப்பட்டியில் முன் களப் பணியாளா்களுக்கு கரோனா தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மூக்காரெட்டிப்பட்டியில் முன் களப் பணியாளா்களுக்கு கரோனா தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மூக்காரெட்டிப்பட்டி கனரா வங்கி கிளை சாா்பில், கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினா், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளா்களுக்குத் தேவையான முகக் கவசம், கிருமிநாசினி, கையுறைகள் உள்ளிட்ட கரோனா தொற்று தடுப்பு உபகரணங்களை தருமபுரி மண்டல மேலாளா் கே.எஸ்.மாதவி தலைமையில், வங்கி அதிகாரிகள் வழங்கினா்.

இதில், வங்கி கிளை மேலாளா் சி.ரமேஷ்குமாா், உதவி காவல் ஆய்வாளா்கள் மனோகரன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.