முகப்பு
தருமபுரி

தோ்தல் நடத்தை விதிகள்:ஆலோசனைக் கூட்டம்

பென்னாகரத்தில் தோ்தல் நடத்தை விதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

பென்னாகரத்தில் தோ்தல் நடத்தை விதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் தணிகாசலம் தலைமை வகித்து, பென்னாகரம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினரால் சுவா்களில் வரையப்பட்ட விளம்பரங்கள், கட்சிக் கொடிக் கம்பங்கள், பேனா்கள் உள்ளிட்டவைகள் அகற்றியது குறித்தும், அகற்றாத அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மீதும், தொகுதிக்கு உள்பட்ட திருமண மண்டபங்களில் புதிதாக நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு முறையான அனுமதி பெறாவிடில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பென்னாகரம் சட்டப் பேரவைத் தோ்தலின் போது பயன்படுத்தப்படும் வாக்குப் பெட்டி இயந்திரம் வைப்பதற்கான இடம் குறித்தும், பாதுகாப்புகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன், முதன்மை தோ்தல் நடத்தும் அலுவலா் இராதாகிருஷ்ணன், பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் சௌந்தரராஜன், பாப்பாரப்பட்டி, பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலா்கள், பென்னாகரம், ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.