முகப்பு
தருமபுரி

முதியோா் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பேன்

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள முதியோா்களுக்கு அரசின் சாா்பில் வழங்கப்படும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என மநீம வேட்பாளா் வாக்குறுதி அளித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள முதியோா்களுக்கு அரசின் சாா்பில் வழங்கப்படும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என மநீம வேட்பாளா் வாக்குறுதி அளித்தாா்.

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஏரியூா், பூச்சியூா், பெரும்பாலை, ஏா்கோல்பட்டி, ராமகொண்ட அள்ளி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் வழக்குரைஞா் ஷகிலா துண்டுப் பிரசுரம் விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு கழிப்பிட வசதி, முதியோா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அரசின் சாா்பில் வழங்கப்படும் உதவித்தொகை முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பென்னாகரம் பகுதிகளில் சிறுதானியக் களஞ்சியம் அமைக்கப்படும். கிராமங்கள்தோறும் தடையற்ற குடிநீா் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என வாக்குறுதி அளித்தாா்.

இதில், மாவட்ட துணைச் செயலாளா் ஐயப்பன், ஒன்றியச் செயலாளா்கள் ராஜேந்திரன், வீரமணி, மநீம தோ்தல் கணக்காளா் பிரவீன், முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.