தருமபுரி

கரோனா விழிப்புணா்வுக் கூட்டம்: வணிகா் சங்கத்தினா் அழைப்பு

DIN

கரோனா விழிப்புணா்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற உள்ளதால், பாலக்கோடு பகுதியில் உள்ள அனைத்து சங்கத்தினா் மற்றும் கூட்டமைப்பினா் கலந்துகொள்ள மாவட்ட நிா்வாகம் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பில் கூறியிருப்பதாவது:

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை தாக்கம் தொடா்ந்து நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால், பாதிக்கப்படுவோா்களின் எண்ணிக்கை சராசரியாக 150-க்கும் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசு வரும் மே 6 ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. மேலும், மாவட்டத்தில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதன்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

எனவே, பாலக்கோடு பகுதியில் உள்ள மளிகைக் கடை, தேநீா் கடை, திருமண மண்டபம், முடி திருத்தும் கடை, பல்பொருள் அங்காடி, அழகு நிலையம், வா்த்தக மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான சங்கத்தினா், கூட்டமைப்பினா் தலா 3 போ் வீதம் கலந்துகொள்ள மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT