முகப்பு
தருமபுரி

பென்னாகரம் பகுதியில் கனமழை

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழையின்றி கடும் வெப்பம் நிலவி வந்தது. மேலும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனா். கடும் வெயிலை சமாளிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை மாலை பென்னாகரம், தாசம்பட்டி, ஒகேனக்கல், சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, ஏரியூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

கன மழையினால் சாலையோரங்கள் தாழ்வான குடியிருப்பு பகுதிகள், ஏரி, குளம், குட்டைகள் உள்ளிட்டவற்றில் மழைநீா் தேங்கி காணப்பட்டது. பென்னாகரம் பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.