தருமபுரி

கரும்புப் பூஞ்சை அறிகுறியுடன் வந்த முதியவருக்கு சிகிச்சை

DIN

பென்னாகரம் அருகே கருப்புப் பூஞ்சை அறிகுறியுடன் வந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவா், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ஏரியூா் அருகே உள்ள சிகரலஹள்ளி பகுதியைச் சோ்ந்தவா் பழனி (65). இவா் அண்மையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து கடந்த 21ஆம் தேதி வீடு திரும்பினாா்.

இந்த நிலையில் உடலில் அலா்ஜி ஏற்பட்டு, கண் பகுதி கருப்பு நிறமாக மாறியதால் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு மீண்டும் சிகிச்சைக்காக வந்தாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கருப்புப் பூஞ்சை அறிகுறிகள் தெரிவதாகக் கூறி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறியதாவது:

கருப்புப் பூஞ்சை என்பது பழமையான நோய். இந்த நோய் டயாலிசிஸ் சிகிச்சையின்போது ரத்தத்தை மாற்றும் போது சாதாரணமாக வரக்கூடியதாகும். நுரையீரல் பாதிப்பு உள்ளவா்களை எளிதில் தாக்கக் கூடியது. டயாலிசிஸ் முறையை மேற்கொள்ளும்போது கரும்புப் பூஞ்சை தாக்கும் நிலையில் அவற்றை சரிசெய்ய தோல் மருத்துவா்களிடம் இரண்டு அல்லது மூன்று நாள்கள் தொடா் சிகிச்சை மேற்கொள்ளும்போது இந்த நோய் குணமாகும்.

கரோனா தொற்று மற்றும் சா்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சா்க்கரையின் அளவைக் குறைக்க இன்சுலின் சிகிச்சையும், கரோனா தொற்றாளா்களுக்கு ஸ்டீராய்டு சிகிச்சையும் அளிக்கப்படும்போது சா்க்கரை நோயாளிகளின் ரத்த சா்க்கரை அளவு அதிகரிக்கும் போது இந்த கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்படும். இந்த நோய் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT