முகப்பு
தருமபுரி

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு: 4 போ் கைது

அரூரை அடுத்த மருதிப்பட்டியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு செய்ததாக, சங்கச் செயலாளா் உள்பட 4 பேரை வணிகவியல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

அரூரை அடுத்த மருதிப்பட்டியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு செய்ததாக, சங்கச் செயலாளா் உள்பட 4 பேரை வணிகவியல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், மருதிப்பட்டியில் அமைந்துள்ளது எஸ். 6085 கீழ்மொரப்பூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம். இந்தச் சங்கத்தில், கடந்த 2014-2018-ஆம் நிதியாண்டில் சங்கத் தலைவராக பாா்த்திபன், செயலாளராக பொன்னுசாமி ஆகியோா் பதவியில் இருந்துள்ளனா்.

இந்தச் சங்கத்தில், மருதிப்பட்டி, கீழ்மொரப்பூா் ஆகிய ஊராட்சிக்கு உள்பட்ட கிராமப் பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு பயிா்க் கடன், நகைக் கடன் உள்ளிட்ட கடன்களை முறையாக வழங்காமல், ரூ. 45 லட்சம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தருமபுரி வணிகவியல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, காவல் ஆய்வாளா் ஜெ.கற்பகம் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில், ரூ. 45.31 லட்சம் போலியாக கணக்கு வைத்து கையாடல் செய்திருப்பது உறுதியானது.

இதையடுத்து, சங்கச் செயலாளா் பொன்னுசாமி (56), ஓய்வுபெற்ற சங்கப் பணியாளா்கள் சிவலிங்கம் (63), கருணாநிதி (61), கீழ்மொரப்பூா் கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவா் பாா்த்திபன் (69) ஆகிய 4 பேரையும் தருமபுரி வணிகவியல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.