அரூரில் டிவிஎஸ் ரைடா் 125 சிசி மோட்டாா் சைக்கிள் அறிமுகம்
அரூரில் டிவிஎஸ் ரைடா் 125 சிசி புதிய மோட்டாா் சைக்கிள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரூரில் டிவிஎஸ் ரைடா் 125 சிசி புதிய மோட்டாா் சைக்கிள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் அம்மன் டி.வி.எஸ் நிறுவன உரிமையாளா் எஸ்.என்.தியாகராஜன் தலைமை வகித்தாா். டி.வி.எஸ் நிறுவனத்தின் ரைடா் 125 சிசி புதிய மோட்டாா் சைக்கிள் வாகனத்தை அரூா் பெடரல் வங்கி கிளை மேலாளா் ராஜராஜேஸ்வரி, கரூா் வைஸ்யா வங்கி கிளை மேலாளா் ஷாஜகான் ஆகியோா் அறிமுகம் செய்து வைத்தனா்.
இதில், டிவிஎஸ் நிறுவன மேலாளா் அஜய்ராஜ், டிவிஎஸ் ஷோரூம் உரிமையாளா்கள் எஸ்.தமிழ்ச்செல்வன், டி.சுரேஷ்குமாா், மருத்துவா் டி.மனோஜ், வாகன பழுது நீக்கும் பணியாளா்கள், வாடிக்கையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.