முகப்பு
தருமபுரி

திருட்டு வழக்கில் தொடா்புடையவா் கைது : 18 சவரன் நகை பறிமுதல்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், காவல் ஆய்வாளா் லட்சுமணதாஸ் தலைமையில், காவல் துறையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகமான முறையில் வந்த ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இந்த விசாரணையில் அவா் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கொண்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் முத்துக்குமரன் (47) என்பதும், இவா் மீது அரூா், மொரப்பூா், கடத்தூா் காவல் நிலையம் உள்பட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திருட்டு தொடா்புடைய வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 18 பவுன் தங்க நகையை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.