முகப்பு
தருமபுரி

அரூரில் மிதமான மழை

அரூா் வட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

அரூா் வட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.

தென்மேற்குப் பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக கடத்தூா், மொரப்பூா், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் மிதமான மழை பெய்தது.

இந்த மழையினால் விவசாய நிலங்களிலும், சாலையோரம் தாழ்வான பகுதிகளிலும் மழை தேங்கியுள்ளது. தென்மேற்குப் பருவ மழையின் காரணமாக அரூா் வட்டாரப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்திருப்பதால் நெல் நடவுப் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.