தருமபுரி

தலைக் கவசம், முகக் கவசம் அணிய விழிப்புணா்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல் துறையினா்

DIN

அரூரில் தலைக் கவசம், முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வோரில் பலா் தலைக்கவசம் அணிவதில்லை. குறைந்த அளவிலான வாகன ஓட்டிகள் மட்டுமே தலைக் கவசம் அணிந்து செல்கின்றனா். முறையான சாலை விதிகளைக் கடைப்பிடிக்காத காரணங்களால் வாகன விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோா், தலைப் பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழக்கின்றனா்.

இதேபோல், முகக் கவசம் அணியாமல் செல்வோா் கரோனா தொற்றால் எளிதில் பாதிக்கின்றனா். எனவே, வீட்டில் இருந்து வெளியில் வரும் அனைவரும் முகக் கவசம் அணிந்து பொது இடங்களுக்கு செல்ல வேண்டும்.

தலைக் கவசம், முகக்கவசம் அணிவதை வலியுறுத்தி அரூரில், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா் தலைமையிலான காவல் துறையினா், அரூா் கச்சேரிமேடு, பேருந்து நிலையம், கடை வீதி, மஜீத் தெரு, பாட்சாபேட்டை, திரு.வி.க. நகா் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தி துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT