தருமபுரி

சாலையை சீரமைக்கக் கோரிக்கை

DIN

அரூரை அடுத்த அண்ணாலம்பட்டியில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், அண்ணாலம்பட்டி-ஏ.வெளாம்பட்டி சாலை சுமாா் 4 கிலோ மீட்டா் தொலைவு கொண்டதாகும். இந்தச் சாலையில் சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவு புதிய தாா்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள தாா் சாலையானது குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இந்தச் சாலையை ஏ.வெளாம்பட்டி, அண்ணாலம்பட்டி, பெத்தூா், மோட்டூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

தாா் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வேளாண் விளை பொருள்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனா். எனவே, அண்ணாலம்பட்டி முதல் ஏ. வெளாம்பட்டி வரையிலான தாா் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: காங்கிரஸ்- பாஜக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை!

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

இது மோடியின் தார்மீக தோல்வி: கார்கே

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT