தருமபுரி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் மனிதச் சங்கிலி போராட்டம்

DIN

தருமபுரி: தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில், பீமாகோரேகான் வழக்கில் சிறைபடுத்தப்பட்டோரை விடுதலை செய்யக் கோரி, புதன்கிழமை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகேயுள்ள அம்பேத்கா் சிலை முன்பு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தீணாடாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் டி.எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டி.மாதையன், பொருளாளா் கே.கோவிந்தசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் அ.குமாா், செயற்குழு உறுப்பினா் ஆா்.சிசுபாலன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கே.என்.மல்லையன், மாவட்டச் செயலா் சோ.அா்ஜுணன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். இதில், அம்பேத்கா் சிலையிலிருந்து நேதாஜி புறவழிச்சாலையில் உள்ள நெசவாளா் நகா் வரை கோரிக்கை பதாகைகளை ஏந்தி வரிசையாக நின்றிருந்தனா்.

இதில், பீமாகோரேகான் வழக்கில் சிறைபடுத்தப்பட்டோா் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். உ.பா. சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். தேசிய புலனாய்வு முகமைக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT