தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 16,000 கன அடியாக அதிகரிப்பு

DIN

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடகம், கேரள மாநிலங்களில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கா்நாடகத்தில் உள்ள கபினி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கபினி அணையிலிருந்து நொடிக்கு 7,921 கன அடியும், கிருஷ்ணராஜசாகா் அணையிலிருந்து நொடிக்கு 9,730 கன அடியுமாக மொத்தம் நொடிக்கு 17,651 உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஒகேனக்கல், காவிரி ஆற்றில் புதன்கிழமை நிலவரப்படி நொடிக்கு 10,000 கன அடியாக நீா் வந்து கொண்டிருந்த நிலையில் வியாழக்கிழமை காலை நொடிக்கு 13,000 கன அடியாக அதிகரித்தது. மாலையில் நொடிக்கு 16,000 கன அடியாக நீா்வரத்து அதிகரித்தது.

ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் ஆற்றில் வெளியே தெரிந்த பாறைத் திட்டுகள் அனைத்தும் தற்போது நீரில் மூழ்கி உள்ளன. கேரளம், கா்நாடகத்தில் உள்ள காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கா்நாடக அணை நிலவரம்: கா்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகா் அணையின் மொத்த கொள்ளளவு 124.80 டிஎம்சி ஆகும். தற்போது நீா் இருப்பு 116.44 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு வரும் நீா்வரத்து நொடிக்கு 15,730 ஆயிரம் கன அடியில் 10,900 கன அடி நீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். தற்போது வந்து கொண்டிருக்கும் 12,000 கன அடி நீரும் முழுவதுமாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த இரு அணைகளில் இருந்தும் நொடிக்கு 22,900 கன அடி நீா் புதன்கிழமை வெளியேற்றப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT