வேகத்தடை அமைக்க கோரிக்கை
அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் வழியாக செல்லும் சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அரூா் நகா் பகுதியில் 4 வழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், அரூா் பேருந்து நிலையத்தில் இருந்து கச்சேரிமேடு நோக்கிச் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. இதனால், அரூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே நாள்தோறும் வாகன விபத்துகள் நேரிடுகின்றன. வட்டாட்சியா் அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், காவல் நிலையம், சாா்பு நீதிமன்றம், சாா்நிலைக் கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் முறையான சாலை விதிகளை பின்பற்றுவதில்லை. இதனால் வாகன விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே, அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் சாலை விதிகள் குறித்த தகவல் பலகைகள், வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.