தருமபுரி

சூடானூா் கல்குவாரிகளை மூடக் கோரி மனு

DIN

பாலக்கோடு அருகே உள்ள சூடானூரைச் சுற்றியுள்ள கல்குவாரிகளை மூடக் கோரி அந்தக் கிராம மக்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சூடானூரில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. குவாரிகளில் பயன்படுத்தும் வெடிகளால் ஏற்படும் சப்தத்தில் வன விலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி கிராமத்துக்குள் நுழைகின்றன.

அதுபோல குவாரிகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே, அப்பகுதியில் உள்ள கல்குவாரிகளை மூடக் கோரி அண்மையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது; பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடா்ந்து கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. எனவே, இந்தக் கல்குவாரிகளை மூட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT