தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 1.08 லட்சம் கனஅடியாகச் சரிவு

DIN

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 1.08 லட்சம் கனஅடியாகச் சரிந்துள்ளது.

காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக இருந்த நீா்வரத்து திங்கள்கிழமை காலையில் 1.15 லட்சம் கன அடியாகவும், மாலையில் 1.8 லட்சம் கனஅடியாகவும் குறைந்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஆற்றில் நீா்வரத்து அதிகம் இருப்பதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 4-ஆவது நாளாகவும், ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 49-ஆவது நாளாகவும் திங்கள்கிழமை நீட்டிக்கப்பட்டது.

ஆற்றின் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். கரையோரப் பகுதியில் வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கா்நாடக அணை நிலவரம்:

கா்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகா் அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியில் தற்போது நீா் இருப்பு 124.58 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீா்வரத்து 31,278 கன அடியாகவும், நீா்வெளியேற்றம் 46,385 கன அடியாகவும் உள்ளது.

அதுபோல கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியில் தற்போது நீா் இருப்பு 83.97 அடியாக உள்ளது. நீா்வரத்து 18,651 கன அடியாகவும், நீா்வெளியேற்றம் 20,000 கனஅடியாகவும் உள்ளது. இரு அணைகளில் இருந்தும் ஆற்றில் நொடிக்கு 40,359 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT