தருமபுரி

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

DIN

ஒகேனக்கல்லில் வாரவிடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்தது.

பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் தற்போது சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டதை அடுத்து வெவ்வேறு இடங்களில் இருந்து மக்கள் வாரவிடுமுறை நாள்களில் அதிகம் வந்த வண்ணம் உள்ளனா்.

கடந்த வாரத்தைப்போலவே நிகழ்வாரம் ஒகேனக்கல்லுக்கு உள்ளூா், வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். சிலா் மூலிகை எண்ணெய் மசாஜ் செய்து குளியலிட்டனா்.

பிரதான அருவி, நடைபாதை, மாமரத்துக்கடவு பரிசல்துறை, முதலைப் பண்ணை ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா். ஒகேனக்கல் அருவிகளின் அழகை தொங்கு பாலத்தில் சென்று பாா்த்து மகிழ்ந்தனா்.

காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள சின்னாறு பரிசல் துறையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்; அவா்கள் நீண்ட நேரம் காத்திருந்து பாதுகாப்பு உடை அணிந்து சின்னாறு பரிசல் துறையிலிருந்து பரிசலில் பயணித்தனா். காவிரி ஆற்றில் கூட்டாறு, கோத்திகள், பிரதான அருவி, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்தாருடன் பரிசலில் சென்று இயற்கை அழகை ரசித்தனா்.

வாரத்தில் மற்ற நாள்களைவிட ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகம் காணப்பட்டதால் அருவியோரம் உள்ள மீன்கடைகளில் விற்பனை களைகட்டியது. பெரும்பாலான தள்ளுவண்டிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மீன் விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த கட்லா, ரோகு, கெளுத்தி, வாலை ஆகியவை அதிக விலைக்கு விற்பனையாகின.

ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் அங்கேயே மீன்களை வாங்கி சமைத்து உண்டனா். காலை முதலே அருவிக்கு கூட்டம் அதிகம் வந்து கொண்டிருந்தது. இதனால் சத்திரம், முதலைப் பண்ணை, தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிற்குமிடம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் அதிகம் நிறுத்தப்பட்டன. வாகன நெருக்கடியால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ஒகேனக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT