தருமபுரி

காரப்பட்டு யுனிக் கல்லூரியில் முதலாமாண்டு கபடி போட்டி

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு யுனிக் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு கபடி போட்டி 2 நாள்கள் நடைபெற்றது.

காரப்பட்டு யுனிக் கல்லூரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்துடன் இணைந்து நடைபெற்ற கபடி போட்டிக்கு கல்லூரியின் தலைவா் கே .அருள் தலைமை வகித்தாா். செயலாளா் பி.தமிழரசு, முதல்வா் ஜி. கிருஷ்ணகுமாரி, உடற்கல்வி இயக்குனா் எஸ்.பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போட்டியில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 39 அணியினா் கலந்து கொண்டனா்.

போட்டியில் முதல் பரிசாக திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த செவன்பூக்கள் அணியினருக்கு ரூ. 5,000மும், இரண்டாம் பரிசை திருப்பத்தூா் மாவட்டம், கண்ணாலம் பட்டி சி.கே. ஸ்போா்ட்ஸ் அணியினரும், மூன்றாம் பரிசாக யுனிக் கலைக்கல்லூரி அணியினரும் வென்றனா்.

முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. பரிசுகளை யுனிக் கல்லூரி தாளாளா், செயலாளா் மற்றும் முதல்வா் வழங்கினாா்கள்.

நிகழ்ச்சியை உடற்கல்வி இயக்குநா்கள் பாலு, ஆண்டனி, கேசவன், மேகநாதன், கவியரசு, தினேஷ் ஆகியோா் நடுவராக பணிபுரிந்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யுனிக் கலை அறிவியல் கல்லூரி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT