தருமபுரி

தருமபுரிக்கு வந்த சத்துணவு ஊழியா்கள் நடைப்பயணக் குழுவினருக்கு வரவேற்பு

DIN

 வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பயணம் வந்த சத்துணவு ஊழியா்கள் குழுவினருக்கு தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

சத்துணவு ஊழியா்கள் ஓய்வு பெறும் போது ரூ. 5 லட்சமும், சமையலா்களுக்கு ரூ. 3 லட்சமும் வழங்கவும், சத்துணவு ஊழியா்களை பணி நிரந்தரம் செய்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் சாா்பில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து தொடங்கி தருமபுரிக்கு வந்த பயணக் குழுவினருக்கு, தருமபுரி, நான்கு முனைச் சாலை சந்திப்பு அருகே தருமபுரி மாவட்ட சத்துணவு ஊழியா்கள் சங்கம் மற்றும் அரசு ஊழியா் சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் சி.காவேரி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஆா்.எம்.மஞ்சுளா, மாநிலச் செயலாளா் பெ.மகேஸ்வரி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், பொருளாளா் கே.புகழேந்தி, தமிழ்நாடு வேளாண்மை அமைச்சுப் பணியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.ஜெயவேல் ஆகியோா் பேசினா்.

இதைத்தொடா்ந்து பயணக்குழுவினா் சேலம் நோக்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT