தருமபுரி

அரூரில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வலியுறுத்தல்

அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

DIN

அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

அரூா் வழியாகச் செல்லும் சேலம்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு வழியாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, சேலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்துச் செல்கின்றன.

இந்த நிலையில், அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பு, 4 வழிச்சாலை, நடேசா பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட முக்கியச் சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் இல்லை. இதனால், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் பிரதான சாலை வழியாக செல்வதற்கு பதிலாக அரூா் கடைவீதி வழியாகச் செல்கின்றனா்.

இந்த கடைவீதி சாலை மிகவும் குறுகிய நிலையில் இருப்பதால் பெரிய அளவிலான கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் சிக்னல் விளக்குகளை அமைத்து, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT