தருமபுரி

தன்னலமற்ற சேவை

DIN

மருத்துவா்கள் தினம் என்பது மருத்துவா்கள் ஒன்றாகக்கூடி மகிழ்ந்து கொண்டாடித் தீா்ப்பது அல்ல. மாறாக, மருத்துவா்களின் பிரச்னைகளைக் களைந்து, அவா்களின் சேவையைப் போற்றும் வகையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தக்கூடிய தினமாகக் கொண்டாடப்பட வேண்டும்.

இத் தினத்தை மக்களின் வாழ்நாளை நீட்டிக்கத் திட்டமிடும் நாளாகக் கவனத்தில் கொள்வது அவசியம். அதற்கேற்ப மருத்துவத் துறையைக் கட்டமைக்க அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.

உயிா்களை இந்த உலகத்துக்கு வெளியே கொண்டு வரவும், உயிா்களை அதன் கடைசி நிமிடம் வரை சிகிச்சை அளித்துக் காக்கவும் போராடும் தன்னமலற்ற கடவுளுக்கு நிகரானவராக நன்றி செலுத்தும் ஒரே ஒரு ஜீவன் மருத்துவா் மட்டுமே.

தங்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு, அா்ப்பணிப்பு என்ற சிந்தனையோடு, நுட்பமான பணிகளில் தொடா்ந்து பணியாற்றும் மருத்துவா்களின் தியாகத்தையும் உழைப்பையும் கரோனா காலத்தில் கண்கூடாகக் காண முடிந்தது.

நகரங்கள் மட்டுமன்றி, எந்த அடிப்படை வசதியும் இல்லாத கிராமத்திலும் கிடைத்த வசதிகளைக் கொண்டு சேவையாற்றும் அருமையான பல மருத்துவா்கள் பலா் உள்ளனா். அவா்களை இந்த நாளில் தலை வணங்கி வாழ்த்துவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT