முகப்பு
தருமபுரி

சிகரம் மெட்ரிக். பள்ளியில் சிலம்பம் பயிற்சி

பாப்பம்பாடி சிகரம் மெட்ரிக். பள்ளியில் சிலம்பம் பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

பாப்பம்பாடி சிகரம் மெட்ரிக். பள்ளியில் சிலம்பம் பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, சிகரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் செந்தில் தலைமை வகித்தாா். சிலம்பத்தின் அடிப்படை காலடி வரிசை பயிற்சி, வெளிச்சுற்று, உள்சுற்று பயிற்சி, போா்க்கலை சண்டை முறை பயிற்சி, தற்காப்பு, தனித்திறமை போட்டி பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை 12 முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவ, மாணவியருக்கு வெற்றிவேல் சிலம்ப பயிற்சிப் பள்ளி ஆசிரியா் சுரேஷ் வழங்கினாா்.

இதில், பள்ளியின் தலைவா் வையாபுரி, தாளாளா் முருகன், துணை முதல்வா்கள் மனோகரன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.