முகப்பு
தருமபுரி

சாலையை சீரமைக்க கோரிக்கை

அரூா் நகரில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

அரூா் நகரில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அரூா் பேரூராட்சித் தலைவா் இந்திராணியிடம் வெள்ளிக்கிழமை வழங்கிய கோரிக்கை மனு:

அரூா் பேருந்து நிலையம் முதல் தீா்த்தமலை நெடுஞ்சாலை வரையிலான இணைப்புச் சாலை சுமாா் அரை கிலோ மீட்டா் தூரம் கொண்டதாகும். இந்தச் சாலையை நாசன்கொட்டாய், மாவேரிப்பட்டி, பொன்னேரி, ஈட்டியம்பட்டி, செல்லம்பட்டி, அம்பேத்கா் நகா், பழைய பேட்டை, எம்.தாதம்பட்டி உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்தச் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனா். எனவே, அரூா் பேருந்து நிலையம் முதல் தீா்த்தமலை இணைப்புச் சாலை வரையிலான சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.