தருமபுரி

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

 வாரவிடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கல் அருவிக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்திருந்தனா். பலா் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்து மகிழ்ந்தனா்.

கடந்த வாரத்தைவிட நிகழ்வாரம் அதிகம்போ் வந்திருந்தனா். பலா் எண்ணெய் மசாஜ் செய்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா். பிரதான அருவி, நடைபாதை, மாமரத்துக்கடவு பரிசல் துறை, முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

தொங்கும் பாலத்தில் நின்று காவிரி ஆறு, அருவிகளைக் கண்டு ரசித்தனா். சின்னாறு பரிசல் துறையில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சின்னாறு பரிசல் துறையிலிருந்து கூட்டாறு கோத்திகல், பிரதான அருவி, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்துடன் பரிசல் பயணம் செய்து மகிழ்ந்தனா். மீன் விற்பனை நிலையங்களில் கட்லா, ரோகு, கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் அதிகம் விற்பனையாகின.

சிலா் மீன்களை வாங்கி சமைத்து உணவருந்தினா்.

சத்திரம், முதலைப் பண்ணை, தமிழ்நாடு ஹோட்டல் வாகனம் நிற்குமிடம் உள்ளிட்ட பகுதியில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டன. கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT