தருமபுரி

பெண் குத்தி கொலை: கணவா் கைது

பென்னாகரம் அருகே மதுபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை ஒகேனக்கல் போலீஸாா் கைது செய்தனா்.

DIN

பென்னாகரம் அருகே மதுபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை ஒகேனக்கல் போலீஸாா் கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட அளேபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மனைவி பிரியா (45). இவா் சமையல் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் மது போதையில் இருந்த தங்கராஜ், பிரியாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது பிரியாவை கத்தியால் குத்தியுள்ளாா். இதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்துள்ளாா்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினா் ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். ஒகேனக்கல் போலீஸாா் நிகழ்விடத்திற்கு வந்து பிரியாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தங்கராஜை கைது செய்து பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT