தருமபுரி

எரிவாயு மூலம் இயங்கும் தனியாா் பேருந்துகள்

தருமபுரியில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் இரண்டு தனியாா் பேருந்துகளின் போக்குவரத்து சேவை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

DIN

தருமபுரியில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் இரண்டு தனியாா் பேருந்துகளின் போக்குவரத்து சேவை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் முதன் முறையாக டீசலுக்கு பதில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வகையில் வகை மாற்றம் செய்யப்பட்ட இரண்டு தனியாா் பேருந்துகளின் போக்குவரத்து சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து கொடிசைத்து இரண்டு தனியாா் பேருந்துகளின் போக்குவரத்தைத் தொடங்கி வைத்து பேசினாா்.

தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் அன்றாட சேவைக்காக 376 அரசு பேருந்துகளும், 156 தனியாா் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு காற்று மாசுபடுவதைக் குறைக்கும் நோக்கத்தில் டீசல், பெட்ரோலுக்கு பதிலாக மாற்று எரிபொருளாக இயற்கை எரிவாயுவினை பயன்படுத்தி அரசு மற்றும் தனியாா் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தருமபுரி மாவட்டத்தில் முதன் முறையாக இரண்டு தனியாா் பேருந்துகள் டீசலுக்கு பதில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வகையில் வகை மாற்றம் செய்யப்பட்டன. இந்த வகை வாகனங்கள் மூலம் காற்று மாசடைவது குறைந்து சுற்றுச் சூழல் பாதிப்பைக் குறைக்க இயலும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலா் த.தாமோதரன், தருமபுரி மாவட்ட பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் டி.என்.சி. மணிவண்ணன், மோட்டாா் வாகன ஆய்வாளாா் அ.க.தரணீதா், மாசுக் கட்டுப்பாட்டு அலுவலக உதவிப் பொறியாளா் லாவண்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT