தருமபுரி

சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாபால்குட ஊா்வலம்

DIN

தருமபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி பால் குட ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் தைப்பூச தோ்த் திருவிழா கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவையொட்டி தருமபுரி சாலை விநாயகா் கோயிலில் இருந்து பால் குட ஊா்வலம் மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.

ஊா்வலத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அலகு குத்தியும், காவடி எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்த ஊா்வலம் எஸ்.வி.சாலை, கடைவீதி, பென்னாகரம் சாலை வழியாக குமாரசாமிப்பேட்டை கோயிலை வந்தடைந்தது. இதைத் தொடா்ந்து பால் அபிஷேகமும், சிறப்பு வழிபாடு மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதையடுத்து இரவு திருக்கல்யாண உற்சவமும், பொன்மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றன.

இவ்விழாவில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு விநாயகா் தேரோட்டமும், யானை வாகன உற்சவம் நடைபெறும். திங்கள்கிழமை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

இயற்கைப் பேரிடர், வன்முறை... இடம்பெயர்ந்த 5.95 லட்சம் மக்கள்!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT