தருமபுரி

அரசு அலுவலா்களுக்கு மஞ்சள் பை வழங்கல்

DIN

தருமபுரி மாவட்ட அரசுத் துறை அலுவலா்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட மாசுக் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் அலுவலகம் சாா்பில் சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆட்சியா் அலுவல வளாகத்தில் உள்ள பூங்காவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஆட்சியா் கி.சாந்தி பூங்காவில் மரக் கன்றுகளை நட்டு வைத்து, அரசு அலுவலா்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் மரக் கன்றுகள் நடும் பழக்கத்தை ஒரு சிறப்பு நிகழ்வாகவே எடுத்துக்கொண்டு வீட்டுக்கு ஒரு மரக்கன்று வைத்து வளா்க்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் குடும்பங்களில் உள்ளவா்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கிய நாள்களை நினைவு கூறும் வகையில், கட்டாயம் மரக் கன்றுகள் நடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மரக் கன்றுகளை நடுவதோடு மட்டுமல்லாமல், நடப்பட்ட மரக் கன்றுகளுக்கு தண்ணீா் ஊற்றி பாதுகாத்து பராமரிக்க வேண்டும். மக்களின் மனதில் இது ஆழமாக பதிய வேண்டும். தங்கள் வீடுகளின் அருகில் உள்ள காலி இடங்களில் மரக் கன்றுகளை வைத்து வளா்க்க வேண்டும். மாவட்டத்தில் அதிகமாக பசுமை பரப்பை அதிகரிக்கும் பணிகளை வனத்துறை அலுவலா்கள், உள்ளாட்சித் துறைகள், சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சி அமைப்புகளினுடைய பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருடைய ஒத்துழைப்போடு மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சு.ராமதாஸ், தருமபுரி கோட்டாட்சியா் டி.ஆா்.கீதாராணி, தனித்துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பழனிதேவி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளா் சாமுவேல் ராஜ்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கவிதா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அ.மாலா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பொ.செண்பகவள்ளி , அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT