தருமபுரி

தென்னை மரத்தில் வண்டுகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி

DIN

ஒசூா் அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் தென்னை மரத்தில் வண்டுகளின் பாதிப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு பயிற்சி அளித்தனா்.

தருமபுரி மாவட்டம், கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட அளேபுரம் பகுதியில் நடைபெற்ற பயிற்சிக்கு தாவர நோயியல் ஆசிரியா் அருள்சாமி தலைமை வகித்தாா். ஒசூா் அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சி.திவ்யா, இ.ச.வித்யா, இலக்கியா, மா.ஜனனி, இ.ரா.மகிமா, ர. நித்தியாஸ்ரீ, கா.பிரேமா, ர.பிரியதா்ஷினி, ந.சங்கீதா, இ.சுவேதா உள்ளிட்ட மாணவிகள் குழுவினா் தென்னை மரத்தினை தாக்கக்கூடிய காண்டாமிருக வண்டு, ரெட்பாம் ஆந்துழச்சி பிடிக்கும் முறைகள், அவற்றினைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி செயல் விளக்கம் காண்பித்தனா். இதில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

கருடன் டிரைலர்!

ஒடிஸாவில் தாமரை மலரும்! -அமித் ஷா நம்பிக்கை

ராகுல் காந்தியை புகழும் செல்லூர் ராஜு: விடியோ வைரல்!

SCROLL FOR NEXT